பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எல குணாவின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் 48 வயதுடைய எலிசபெத் என்ற பெண், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் கிம்புல் எல குணாவின் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 7 கிராம் ஐஸ் போதைப் பொருளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.