உடவளவ அணைக்கு மேல் செல்லும் இருவழிப்பாதை அடைப்பு!

உடவளவ அணையின் கரைக்கு மேல் செல்லும் இருவழிப்பாதை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 7 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மகாவலி அதிகாரசபையின் கூற்றுப்படி, மூன்று கட்டங்களின் கீழ், ஜனவரி 15 ஆம் திகதி வரை பாதை மூடப்பட்டிருக்கும்.

இதனால், டிசம்பர் 22 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு சாலையின் பாதை முற்றிலும் வாகனப் போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 23 முதல் ஜனவரி 06 வரை ஒரு வழிப்பாதை திறக்கப்படும்.

இதனடிப்படையில், உடவலவை மற்றும் எம்பிலிப்பிட்டிய ஊடாக 13 ஆம் மைல் வரையிலான வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு மகாவலி அதிகார சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

சபாரி ஜீப்புகள் மற்றும் கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சாலை திறந்திருக்கும் காலத்தில் அனுமதிக்கப்படும். இருப்பினும், சபாரி ஜீப்புகள் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 6 மணி முதல் மாலை 6:30 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply