ஜனாதிபதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வட்டமேசை கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்ட போதிலும் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply