நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு – பொலிஸாரின் திட்டம்! 

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனடிப்படையில், நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply