இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன.

இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

மேலும், புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த விடுமுறை காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சையை ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply