யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம் அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.