கொழும்பில் பல இடங்களில் நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை 09.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த அந்த சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply