யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று காலை மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SL 8 என பெயரிடப்பட்ட கொள்கலன் போன்ற அமைப்பை ஒத்த மர்ம பொருளே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.
குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று காலப்பகுதியில் அதிகளவான பொருட்கள் கரை ஒதுங்குவது வழமையாக இருக்கின்றது.
அந்தவகையில் யாழில் புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் , உட்பட பல்வேறு பொருட்கள் அண்மை காலமாக கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.