இன்று மாலை சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை சந்தித்து சுகாதார துறையின் கவலைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை காண உள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6.30 மணிமுதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
1000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா அவர்களுக்கும் வழங்கப்படும் அதேவேளை சுகாதார தொழிற்சங்கங்களும் அத்தியாவசிய கடமைகளை மட்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
எவ்வாறாயினும், இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை இது தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
