இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இன்று சற்று அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 316.52 முதல் ரூ. 316.03 மற்றும் ரூ. 327.55 முதல் ரூ. 327.05 ஆக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 315.54 முதல் ரூ. 315.91, விற்பனை விகிதம் ரூ. 326.50 முதல் ரூ. 326 ஆக குறைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 318 ரூபாயிலிருந்து 317 ரூபாய் மற்றும் 327 ரூபாயிலிருந்து 326 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply