வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய காணிகள்- துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிடல்!

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ஒலுவில் ஆத்தியடி கட்டு வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது.

மேலும் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் நெற் காணிகள் அழிவடைந்ததுடன் ஒலுவில், அஸ்ரப் நகர், தீகவாபி பிரதேச மக்களின் போக்குவரத்தும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பான களவிஜயத்தினை நேற்றையதினம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமது ஷாபீர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ். ராஜமோகன், அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் அக்கீல் அஹமட், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் முஜாஹீத், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் நியாஸ் ஆகியோர் மேற்கொண்டிருந்தார்கள்.

மற்றும் ஏனைய துறைசார்ந்த அதிகாரிகளும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ் உதுமாலெப்பை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி. றியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச விவசாய அமைப்புக்களின் சார்பில் எம்.ஐ.எம்.அஸ்ரப் ஆகியோரும் களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தார்கள்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply