மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் விரைந்து செயல்பட்ட பொலிஸாரும் இணைந்திருந்தனர்.
பழங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பல நிலையங்கள் இந்த தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.