வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நுவரெலியா – ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்குவழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா – ஹட்டன் குறுக்குவழியில் வீதியில் வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அந்த வீதியில் பொலிஸார் இல்லாத வேளையில் ​​கனரக வாகனங்களை ரகசியமாக பயன்படுத்தும் போது பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததுள்ளது.

இந்த வீதியைச் சேர்ந்த நானுஓயா பொலிஸாரிடம் கேட்ட போது, ​​பொலிஸாரைப் பொருட்படுத்தாமல், அங்கு பொருத்தப்பட்டுள்ள பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக தொடர்ந்தும் செயற்பட்டால், சாரதியை வாகனத்துடன் கைது செய்து முன்னிலைப்படுத்துவோம் என தெரிவித்தனர்.

 

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply