அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேனில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் குழு அஹுங்கல்லையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த போது அதிவேக வீதியில் சூரியவெவ அந்தரவெவ சந்திப்புக்கு அருகில் அதிவேக வீதியை நோக்கிச் சென்ற லொறியின் பின்புறம் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வேனில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் 4 பேரும், சாரதி உதவியாளரும் ஒருவரும் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 8 வயது ரஷ்ய சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த கணவன், மனைவி, அவர்களின் 2 மற்றும் 11 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply