மோதரை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர் தற்போது கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய ஒருவரே குறித்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இதேவேளை,நுழைவாயிலுக்கு அருகில் காரில் வந்த மர்மநபர்கள் குழுவொன்று குறித்த முகாமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய மோதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.