பூட்டப்பட்ட வீடொன்றிலிருந்து சிதைந்த பெண் ஒருவரின் உடல் மீட்பு!

அஹுங்கல்ல பகுதியில்  வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும்  பிரதேசவாசிகள் அருகில் இருந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

குறித்த  முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, நேற்று பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​குறித்த  வீட்டில் வசிக்கும் பெண் வீட்டினுள் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வேளையில்  உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட 65 வயதுடைய  பெண் அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .

சடலம் மீதான விசாரணைகளை தொடர்ந்து  குறித்தசடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

  1. இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply