இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது கொழும்பில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, 10 தொழிற்சங்கங்கள் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றிற்குள் பிரவேசிப்பது அல்லது பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.