கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய சந்தேகத்தின் பேரில் நேற்று அரலகங்விலவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22 வயதான சந்தேக நபர் வெரகல, தேவகல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 23ஆம் திகதி அதிகாலையில் காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரைக்குள் பௌத்த பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 45 வயதான பௌத்த பிக்கு வண. கலப்பலுவாவே தம்மரதன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 6 சந்தேக நபர்களை விசாரணை அதிகாரிகள் இதுவரை கைது செய்துள்ளதுடன், நான்காவது சந்தேக நபரிடம் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் T-56 ரக துப்பாக்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ரிமோட் சுவிட்ச் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.