பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்!

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை கூடிய விரைவில் முடிக்குமாறும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply