வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் வீதியில் பரிதாபமாக பலி!

யாழ். போதனா வைத்தியசாலையில், விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று நோயாளி ஒருவர் , வைத்தியசாலையை விட்டு, அனுமதியின்றி வெளியேறிய நிலையில் வீதியில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் , தலையாழி பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பஞ்சலிங்கம் தினேஷ்   என்பவரே உயிரிழந்துள்ளார்.

மூச்செடுக்க முடியாமல் ,சிரமமாக உள்ளதாக தெரிவித்து , வைத்தியசாலையில் அனுமதியாகி இருந்தார். அதனை அடுத்து அவரை விடுதியில் மறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலை விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியேறியவர் , வைத்தியசாலை வளாகத்தை விட்டு , வெளியேறி சிறிது தூரம் சென்ற நிலையில் , வீதியில் இரத்த வாந்தி எடுத்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply