கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் தொடர் காய்ச்சல், இருமல்  காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply