இரத்மலானை, பொருபனையில் இன்று (16) அதிகாலை 52 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் அறிக்கையின்படி, இரண்டு தாக்குதல்காரர்கள் அந்த நபர் தனது படுக்கையறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொலை செய்துள்ளார்.
இதுவரை அடையாளம் காணப்படாத குற்றவாளிகளை தேடும் நோக்கில் கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.