ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், தலைமை நீதிபதி தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தடை விதித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்கவின் நியமனத்திற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டத்தரணியொருவர் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போதே உச்ச நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை அக்டோபர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.