கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று மாலை 3.30 மணியளவில் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து பெண் ஒருவர் உட்பட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.