ஐஎஸ்ஐஎஸ் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் வருகை – இந்தியா ஊடகங்கள் சந்தேகம்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த 4 சந்தேக நபர்களும் மே 20 அன்று அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நால்வருடன் தொடர்பில் இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபரான ஒஸ்மன்ட் ஜெராட் என்பவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அவரை கைது செய்ய தகவல் அளிப்பவர்களுக்கு 2 மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் ‘அபு பாகிஸ்தானி’ என்ற போதகருடன் தொடர்பில் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply