ஊடகவியலாளர்களுக்கு இந்தியா வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

இந்தியாவில்  இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றிற்கு இலங்கையிலிருந்து செல்ல விரும்பும் ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவினால் விசேட புலமைப்பரிசில் ஒன்று வழங்கப்படுவதாக இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் லபலு விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த புலமைப்பரிசிலை பெற விரும்புபவர்கள் தங்களது சுயவிபர கோவையை இந்திய உயர்ஸ்தானிகராலய மின்னஞ்சலுக்கு (slhc.newdelhi@mfa.gov.lk) அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பதிவுகள் இன்றுடன் (11.06.2024) முடிவுறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் காரியாலயத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply