மீண்டும் திறக்கப்பட்ட கரையோர ரயில் பாதை!

பாணந்துறையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் தடைப்பட்டிருந்த கரையோர ரயில் பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது.

பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதையடுத்து கரையோர ரயில் பாதையின் இரு தண்டவாளங்களும் அடைக்கப்பட்டதால், ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் கடுமையாகப் போராடி, ஒரு தண்டவாளத்தை திறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ரயில் தடம் புரண்டது விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply