பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு (17) கொலை செய்யப்பட்டதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், அருண் தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதும், அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அருண் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டதும், இதில் படுகாயமடைந்த மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததும் தெரியவந்தது.
அருணை கைது செய்த பொலிசார் , அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.