வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டபட்ட ஒருவர்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று(20) எரிகாயங்களுடன் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மருதங்கேணியை சேர்ந்த 43 வயதானவர் எரிகாயங்களுடன் அலறியடித்துகொண்டு ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மந்திகை ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply