ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திவந்த மேல் நீதிமன்றம், சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்த நிலையில் கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக தயாசிறி ஜயசேகர பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில் தயாசிறி ஜயசேகரவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் சு.கவின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, வாழ்த்துத் தெரிவித்துள்ளடன், ஒன்றாக பயணிப்பதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.