நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்து: மூவர் காயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் டிலான் பெரேராவிற்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் நுழைந்த சைக்கிள் ஓட்டுநர் மீது மோாதமலிருக்க முற்பட்டு கார் வீதியை விட்டு விலகியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply