இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியில் இடம்பெறவில்லை.
எனவே, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடவேண்டும் என்று புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆர்வம் கொண்டுள்ளார்.
இதேவேளை, 20க்கு 20 போட்டிகளில் இருந்து ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வுப் பெற்றுள்ளமையால், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியக்குமார் யாதவ் இலங்கைக்கு எதிரான 20க்கு 20 போட்டிகளுக்கு தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.