அரச நிறுவனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில்1,600 க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனங்களில் சுமார் 91,000 வாகனங்கள் இருப்பதாகவும் நிலையான சொத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலம் மீதான விவாதம் இன்று (25) விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply