சுதந்திரமான தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசியல் தலையீடுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 30 உற்சவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசியல் தலையீடு காரணமாக வாக்காளர்களுக்கு நியமனம் வழங்கல், பொருட்கள் விநியோகம் போன்ற பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வ குழுக்கள் இவ்விடயத்தில் கடுமையாக செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.