ராகம, தெவத்தையிலிருந்து தம்புவ சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.