சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய நாமல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் அவர் அங்கிருந்து வௌியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில் , , நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம் என்னவென்றால், அரசாங்கம் மாறும்போது, ​​​​மற்ற அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்வது வழக்கம்.

2010 முதல் 2015 வரை எனது அலுவலகத்திற்கு ஒருவர் வந்து பணம் கொடுத்துள்ளார் என கூறியே இன்று என்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

இது அநாமதேய முறைப்பாடு. என்றார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply