பதுளை – ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் 2 மாணவிகள் இன்று (01) துன்ஹிந்த பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 39 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த வீதிக்கு அருகில் 3 வது மற்றும் 4 வது கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் இன்று காலை 8 மணிய அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 6 நோயாளர்கள் தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் சாதாரண பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத போதிலும், பிரேக் பழுதடைந்தமையினால் அதிவேகமாக பயணித்த பேருந்து வீதியில் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.