இரத்மலானை விமான நிலையம் குறித்து முக்கிய தீர்மானம்!

இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது அடி சுவர் சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறுவதாக தெரியவந்துள்ளது.

சுவரின் இருப்பிடம் காரணமாக, சிறிய தொழில்நுட்ப பிழையானாலும், சுவரில் விமானம் மோதி பெரும் விபத்து ஏற்படும் என, விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் சங்கம் கூறுகிறது.

இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கைக்கு அமைய, குறித்த எல்லைச் சுவரை அகற்றுவது தொடர்பில் மீளாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply