பொலிஸ் அதிகாரிகள் சிலர் பணி நேரத்தில் மதுபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வந்திருந்த நிலையில், குறித்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் சீருடையை அதிகாரிகள் அவமதித்தமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அதிருப்தி வெளியிட்டதுடன், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, பாணந்துறையில் உள்ள வீடொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த போது மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய அதிகாரி வேறு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.