மீள்புனரமைக்கப்படும் 400 வருட பழமையான துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் உள்ள 400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்புனரமைக்கும் பணிகள் நேற்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மிகத் தொன்மையான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பாரற்று காணப்பட்டிருந்த நிலையில் அதனை மீள்புனரமைப்பு செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது.

அதன்படி எடுக்கப்பட்ட கூட்டு முயற்சியால் நேற்றைய தினம் மீள்புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம், மரபுரிமை மையத்தின் உபதலைவர் சத்திர சிகிச்சைப் பேராசிரியர் ரவிராஜ், இவ்வாலயத்தினை மீள்உருவாக்கம் செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கிய பாலயோகஸ்தினி சிவயோகநாதன் அவர்களின் தந்தை கலாநிதி சிவயோகநாதன், யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் செயலாளர் ரமேஸ், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சிரேஸ் விரிவுரையாளர் ஜெயதீஸ்வரன் இவ்வாலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் இருக்கும் கபிலன், செல்வி துஸ்யந்தி, மணிமாறன் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் பத்திராசிரியர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply