நிலவும் வெப்பமான காலநிலையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும் என்றும், அது அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எனவே அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துமாறும், குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்த வறண்ட வானிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply