
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட சிலர் இணையவுள்ளனர்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நேற்று இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.