
கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, பாணின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பேக்கரியில் தயாரிக்கப்படும் ஏனைய உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தால், நிச்சயம் பேக்கரியில் தயாரிக்கப்படும் ஏனைய உற்பத்திகளின் விலையை 10 ரூபாவால் குறைத்திருக்க முடியும்.
ஆனால் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைத்ததன் அடிப்படையில், பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.