
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று (19) முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
அதற்கு ஏற்ற வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக மக்கள் கடவுச்சீட்டைப் பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்பாக வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
பலர் அதிகாலை நான்கு மணிக்கே அலுவலகம் முன்பாக வந்து வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதால் மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.
இவ்வாறான நிலைமையை தவிர்த்து இனிமேல் விரைவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் 24 மணி நேரமும் இடம்பெறும் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதற்கு ஏற்றவகையில் தேவையான பணியாளர்களை சுழற்சி முறையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.