
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கூடும் தினங்களில் வழமையாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் விசேடமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.