
மினுவாங்கொடை பகுதியில் இன்று (26) காலை 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.