
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் வைத்தியரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கில், சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.