
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற வந்த இளம் பெண்ணை சம்பந்தப்பட்ட மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேகொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,
குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர், அரச வைத்திய அதிகாரிகளின் சாசனத்தை மீறியமையாலும், ஒழுக்கமின்மையாக செயல்பட்டதாலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த சம்பவம் தொடர்பாக நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற வேண்டும்.
எந்தவிதத்திலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றவாளிகளை பாதுகாக்க தயாராக இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்க தயாராக உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.