இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) விளக்கம்!

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் இவான் பபாஜியோர்ஜியோ தலைமையிலான குழு, இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர்  இந்தக் கருத்தை வெளியிட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் மற்றும் சமீபத்திய பேரண்ட பொருளாதார போக்குகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு கடந்த 3 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்தது.

அதன்படி, தமது பணியை முடித்துக்கொண்டு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அந்த குழு, சமீபத்திய வெளிப்புற அதிர்ச்சிகளும் நாளாந்தம் வளர்ந்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளும், தொடர்ந்து வழமைக்கு திரும்பி வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய அதிர்ச்சியின் தாக்கத்தையும், இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் மதிப்பிடுவதற்கு மேலதிக காலம் தேவை என்றும் அந்த தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply