முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல்- தாக்கிய நபர் வைத்தியசாலையில்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் நேற்று (02) மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

தர்க்கத்தில் ஈடுபட்டவருடன் பலர் சமரசம் செய்ய முயன்றபோதும் அவர் அதனை மறுத்து மீண்டும் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டார்.

இதனையடுத்துக் கூடியிருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டினர்.

அந்தப் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், அந்த நபரின் இல்லத்துக்கு வானில் சென்ற சிலர் அவரை நையப்புடைத்தனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply